Homeதமிழ்நாடுகள்ளக்குறிச்சியில் இருக்கும் அத்தனை போலீஸ் இருக்கும் டிரான்ஸ்பர் ஆர்டர்.

கள்ளக்குறிச்சியில் இருக்கும் அத்தனை போலீஸ் இருக்கும் டிரான்ஸ்பர் ஆர்டர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 65 போ் உயிாிழந்தனா். தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதையும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தமிழக அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தன.

கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடனேயே, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன், திருக்கோவிலூா் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமாா் உள்பட 9 போலீசார் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுா்வேதி நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 78 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரஜத் சதுா்வேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அலெக்ஸ், திருநாவலூா் போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுருகன்,

மணலூா்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் ராஜசேகரன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிாிவிற்கும், உளுந்தூா்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பிரபாவதி, உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவிற்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் ஏழுமலை திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்க பிாிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிாிவில் பணியாற்றி வந்த 14 போலீசாா், உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவில் பணியாற்றி வந்த 10 போலீசாா், திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்க பிாிவில் பணியாற்றி வந்த 10 போலீசாா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 39 போலீசாா், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சற்று முன்