Homeதமிழ்நாடுகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு. 62 பேர் உயிரிழந்ததாக தகவல்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு. 62 பேர் உயிரிழந்ததாக தகவல்.

விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. உயிரிழப்புகள் அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கள்ளக்குறிச்சி மக்கள் கண்ணீரில் மூழ்கிய சோகத்தில் உள்ளனர்.

நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது.

அதனை தொடர்ந்து மீண்டும், தற்போது 61-ஆக பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார்(37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.

சற்றுமுன் மேலும் ஒருவர் உயிழந்ததால் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதன் (62) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சிகிச்சை விபரம்
விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில், 90 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேர் என மொத்தம் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் உயிரிழப்பு தொடர்பாக 5 ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கைதான கோவிந்தராஜ், தாமோதரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மெத்தனால் கலந்த சாராயத்தை ஆய்வுக்கு அனுப்ப முடிவு. கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சற்று முன்