Homeதமிழ்நாடுதமிழக பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேற்றிரவு வு வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டது.

இதுதொடர்பான தகவலின் பேரில் தியாகராய நகரில் உள்ள கமலாலயத்திற்கு போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்தனர். பின்னர் அங்கு அவர்கள் நடத்திய சோதனையில், இது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைப்பேசி எண்ணை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சற்று முன்