அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயிர்நிலை பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் இருந்த கணினி வெடித்து சிதறியுள்ளது. இதையடுத்து ஆய்வகம் முழுவதும் கரும்புகை பரவியதில் அங்கிருந்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து 27 மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.