Homeதமிழ்நாடுவரும் 21 ஆம் தேதி காரைக்காலில் உள்ளூர் விடுமுறை!

வரும் 21 ஆம் தேதி காரைக்காலில் உள்ளூர் விடுமுறை!

காரைக்காலில் வரும் 21 ஆம் தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவபெருமானின் அற்புதத்தை போற்றி பாடிய அறுபத்துமூன்று நாயன்மார்களில் முதன்மையாக விளங்குபவர் காரைக்கால் அம்மையார். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் என்ற ஊரில் ஒரு வணிகக் குடும்பத்தில் செல்வந்தர் மகளாக புனிதவதி என்ற பெயரில் பிறந்த இவர், பரமதத்தன் என்பவரை மணமுடித்து வாழ்ந்து வந்தார். சிவனின் மீது தீராத பக்தி கொண்ட இவர் அவரின் திருவிளையாடலில் சிக்கினார். புனிதவதியாருடன் சிவன் நிகழ்த்திய மாம்பழ லீலைகளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனித் திருவிழா காரைக்காலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது தெருவுக்கு தெரு மாங்கனிகள் வீசப்பட்டு விழா களைக்கட்டும்.

இந்நிலையில் காரைக்காலில் வரும் 21 ஆம் தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு உள்ளூர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்