Homeதமிழ்நாடுமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயத்தை, வெளியிட்ட மத்திய அரசு.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயத்தை, வெளியிட்ட மத்திய அரசு.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்ற மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. மத்திய நிதியமைச்சகத்திடம் கடந்த ஆண்டு இதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது. நாணயம் வெளியிடுவதற்கான நடைமுறைகள் முடிவடையாதது உள்ளிட்டவைகள் காரணமாக ஜூன் 3 ஆம் தேதி வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.

இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்று இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு கலைவாணர் அரங்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சற்று முன்