Homeதமிழ்நாடுவயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுடைய கடனை கேரள வங்கி ரத்து செய்தது.

வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுடைய கடனை கேரள வங்கி ரத்து செய்தது.

கேரள வயநாட்டில் இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகளில் உறங்கியவர்கள் மண்ணில் புதைந்து மாய்ந்து போகினர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு வேண்டிய உதவிகளை அனைவரும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, குடும்பத்தை இழந்தவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள வங்கி நிர்வாகம் சார்பில் கூறுகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலைப்பகுதியில் உள்ள கேரள வங்கி கிளையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர். சிலர் குடும்பங்களை இழந்தும் வசித்து வந்த வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் உள்ளவர்கள் வாங்கிய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.

சற்று முன்