Homeதமிழ்நாடுபக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் விரிவாக்கம். அமைச்சர் சேகர்பாபு அறிக்கை!

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் விரிவாக்கம். அமைச்சர் சேகர்பாபு அறிக்கை!

இந்து சமய அறநிலையத்துறயின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கோவை லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹6.50 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் செய்யப்படும்.

பக்தர்களுக்கு நாள்முழுவதும் அன்னதான திட்டம் மதுரை அழகர் கோயில், மருதமலை சுப்பிரமணியசாமி கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதான திட்டம் தற்போது 760 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் 6 கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவு செய்யப்படும்.

திருக்கோயிலில் திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின், 4 கிராம் தங்கத் தாலி உடன் ₹60,000 மதிப்பில் சீர் வரிசையும் வழங்கப்படும்.

ஒரு கால பூஜைத்திட்டத்தில் பயன்பெறும் 17,000 கோயில்களில், வைப்புத்தொகை ₹2.50 லட்சமாக உயர்த்தப்படும். கூடுதலாக 1000 கோயில்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு அர்ச்சகர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்கப்படும்.

ஒரு கால பூஜைத்திட்ட கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களின் கல்விக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

நிதிவசதியற்ற கோயில்களில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு ₹10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

19 கோயில்களில் ₹32 கோடி மதிப்பில் ராஜகோபுரங்கள் அமைக்கப்படும்.

சற்று முன்