Homeதமிழ்நாடுமுதல் திருமணம் செய்ததை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்த மணமகன் கைது. குமரியில் பரபரப்பு.

முதல் திருமணம் செய்ததை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்த மணமகன் கைது. குமரியில் பரபரப்பு.

குமரி மாவட்டம், கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் எம்.காம்., சி ஏ முடித்துவிட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் தணிக்கையாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அவருக்கு நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 26, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.இவர்களது காதலை அறிந்து பெண்ணின் பெற்றோர் சேர்த்து வைக்க நினைத்தனர்.

ராஜேஷ், தான் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் தனது பெற்றோர் தன்னை சிறுவயதிலேயே பாட்டியிடம் ஒப்படைத்து விட்டதாகவும் இதனால் தனக்கென்று உறவினர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய பெண்ணின் பெற்றோர், இருவருக்கும் தங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்தனர்.

தாலிகட்டும் நேரத்தில் ஒரு காரில் ஐந்து நண்பர்களுடன் வந்த ராஜேஷ், பெண்ணுக்குத் தாலி கட்டி மணமகள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, ராஜேசுடன் பணிபுரிந்த பெண் ஒருவர், அவரைப் பார்த்து நீங்கள் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணிபுரிந்தவர் தானே? உங்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாக கூறினீர்களே என்று கேட்டுள்ளார்.

அதன்பின்னர்தான் அவர் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தது மணமகளுக்குத் தெரியவந்தது.

இதனைக் கேட்டு மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார். நித்திரவிளை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, ஆவேசம் அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சரமாரியாகத் தாக்கினர்.

இதைத்தொடர்ந்து, ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.

சற்று முன்