ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியில் இன்று (ஆக. 13) தீ விபத்து ஏற்பட்டது. வங்கியில் பேட்டரி வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், வங்கியின் மேலாளர் ஸ்ரீதர் உடல் கருகி பலியானார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கியில் இருந்த பேட்டரி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.