Homeதமிழ்நாடுமதிமுக சார்பில், திருச்சி மாவட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம்.

மதிமுக சார்பில், திருச்சி மாவட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம்.

மதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு வஞ்சகம், வெள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காமல் அலட்சியப்படுத்தியது, நீட் தேர்வில் குளறுபடி போன்றவற்றை கண்டித்து திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில், நாளை (14- 08-2024 )காலை 10 மணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா மற்றும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கழகக் கொடியுடன் பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

சற்று முன்