தேனி மாவட்டம் போடியில் மதுரை-போடி இடையேயான அகலரயில் பாதையில் மின்சார ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமாக மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் இடையிலான மின்சார ரயில் சோதனை ஓட்டமானது 121 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடியில் மதுரை-போடி இடையேயான அகலரயில் பாதையில் போடிநாயக்கனூர்-மதுரை, போடிநாயக்கனூர்-சென்னை இடையிலான ரயில் போக்குவரத்து துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த சிலமாதங்களாக மின்சார ரயில் போக்குவரத்திற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் அகலரயில் பாதையில் மின்சார ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமாக மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் இடையிலான மின்சார ரயில் தண்டவாளம், ரயில் பாதையின் இடையில் உள்ள 36 பாலங்கள் உள்ளிட்டவைகளின் உறுதித்தன்மை குறித்த சோதனை ஓட்டமானது 121 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது.
சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக முடிந்த நிலையில், வெகு விரைவில் போடிநாயக்கனூர்-சென்னை, போடிநாயக்கனூர்-மதுரை இடையிலான மின்சார ரயில் போக்கவரத்தானது துவங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.