Homeதமிழ்நாடுவாட்ஸ் அப் மற்றும் கியூ ஆர் கோடு மூலம் மின்கட்டணம் செலுத்த வசதி.

வாட்ஸ் அப் மற்றும் கியூ ஆர் கோடு மூலம் மின்கட்டணம் செலுத்த வசதி.

மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன.

அறிவிப்பு 1: க்யூ ஆர் கோடு மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மின்சார வாரியம் கொண்டு வந்துள்ளது. உங்களின் பதிவு செய்யப்பட்ட எண் மூலம் tangedco பக்கத்தில் லாகின் செய்து அங்கே உள்ளே க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும். அதேபோல் க்யூ ஆர் கோடு மின்சார வாரிய அலுவலகங்களிலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறிவிப்பு 2: மின்சார களப்பணியாளர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பின்வரும் செயல்களை செய்ய முடியும். மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் மற்றும் கட்டணம் செலுத்திய இணைப்புகள் பற்றிய விபரங்களை அறிய முடியும்.மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விபரத்தை அறிய முடியும்.
மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பற்றி அறிய முடியும். மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிய முடியும்.

அறிவிப்பு 3: வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நம் வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது! இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும். வீடு நமது அன்பின் கூடு, அதனை RCD-யுடன் பாதுகாப்போம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அறிவிப்பு 4: தமிழ்நாட்டில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை குறியீடு, இருக்கும். எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணத்தை காட்டும். இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.

சற்று முன்