ஜெயங்கொண்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் – சங்கீதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 38 நாட்களே ஆன அந்த குழந்தை ஜூன் 14ஆம் தேதி இறந்து கிடந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குழந்தையால் கடன் பிரச்னை ஏற்படும் என ஜோதிடத்தை நம்பிய வீரமுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.