Homeதமிழ்நாடுமுதல்வர் டெல்லிக்கு செல்வதற்கான காரணம் என்ன?

முதல்வர் டெல்லிக்கு செல்வதற்கான காரணம் என்ன?

நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். பிரதமர் மோடி, 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவாகும். இந்த நிலையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி டெல்லி செல்கிறார்.

நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், மத்திய அரசின் நிலுவைத் தொகை, நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்