நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புக்கான(NEET-UG) கலந்தாய்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது. இதற்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
கலந்தாய்வு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்த நிலையில், திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புக்கான(NEET-UG) கலந்தாய்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான(AIQ) நீட்-யுஜி சீட் கவுன்சிலிங் இன்று தொடங்க இருந்தது.
நீட்-யுஜி பிரச்சனை தொடர்பான மனுக்களை வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.