ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் மாநில அரசு சார்பாக பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஒன்று. ரேஷன் கடைகளில் மட்டும் இன்றி அரசு வழங்கிடும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பொது மக்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படாமல் இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.புதிய ரேஷன் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் விண்ணப்பித்த 30 நாட்களுக்கு புதிய கார்டுகள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.