Homeதமிழ்நாடுஇனி புது சிம் வாங்கணும்னா, இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கு.

இனி புது சிம் வாங்கணும்னா, இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கு.

மொபைல் போன் வாடிக்கையாளர்களின் ஐடி மற்றும் சிம் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் தொலைத் தொடர்புத் துறையில் அதிக பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை உறுதிசெய்யும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மோசடியான வழிகளில் சிம் கார்டுகளை விற்றாலோ, வாங்கினாலோ அல்லது பயன்படுத்தினாலோ மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். அல்லது ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அனுமதியின்றி அழைப்புகளை டேப் செய்வது அல்லது பதிவு செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படும். அவ்வாறு செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதையும், அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

சிம் ஸ்வாப் அல்லது சிம் காரட்டை மாற்றியமைத்த 7 நாட்களுக்குள், யுபிசி (UPC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிக் போர்டிங் கோட் (Unique Porting Code) வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது, அங்கீகரிக்கப்படாத நபர்கள் புதிய சிம் கார்டை மோசடியான வழிகளில் பெறுவதையும். அதை பெற்றவுடன் உடனடியாக போர்டிங் செயல்முறையை செய்வதையும் தடுக்க முயல்கிறது. ஒட்டுமொத்தமாக டிராயின் புதிய சிம் கார்டு விதிமுறைகள் ஆனது சிம் ஸ்வாப் அல்லது சி, ரீபிளேஸ்மென்ட் தொடர்பான மோசடிகளில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Do Not Disturb (DND) சேவையை செயல்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற SMS அல்லது அழைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என்று புதிய விதிமுறை கூறுகிறது. வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் பற்றிய புகார்களைப் பதிவுசெய்யவும், தொல்லை தரும் அழைப்புகளுக்கு தீர்வு பெறவும் இந்த விதிமுறை அனுமதிக்கிறது.

ஒரு அடையாள ஆவணத்தின் கீழ் அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் வரை வாங்கலாம். இந்த வரம்பை மீறினால் முதல் குற்றத்திற்கு ரூ. 50,000 அபராதமும், அடுத்தடுத்த குற்றங்களுக்கு ரூ. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். ஒரே அடையாளத்தின் கீழ் பல சிம் கார்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை இந்த விதிமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது.அதேபோல, சிம் கார்டுகளை வழங்குவதற்கு பயோமெட்ரிக் தரவு கட்டாயமாகும். முறையான சரிபார்ப்புக்குப் பின்னரே சிம் கார்டுகள் வழங்கப்படுவதை இந்த விதிமுறை உறுதிசெய்கிறது.

சற்று முன்