பொதுவாக ஆதார் எண் இல்லாதவர்கள் பான் கார்டு விண்ணப்பம் செய்யும் போது அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தலாம் என்ற விதி அமலில் இருந்தது. அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்கும் விதமாக ஆதார் பதிவு எண்ணை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பான் கார்டுக்கான விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியாது.
அக்டோபர் 1 முதல், பெண் குழந்தைகளுக்கான திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் விதிகளும் மாறும். புதிய விதியின்படி, பேத்திகளுக்கான சுகன்யா சம்ரித்தி கணக்கை தாத்தா பாட்டி திறந்திருந்தால், அந்தக் கணக்கு பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு மாற்றப்படும். இரண்டு கணக்குகளுக்கு மேல் திறக்கப்பட்டிருந்தால், கூடுதல் கணக்கு மூடப்படும்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் பதிவு பத்திரங்களிலிருந்து 10 விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளோட்டிங் ரேட் கொண்ட பத்திரங்களும் அடங்கும். எனவே ஆண்டுக்கு ரூ.10,000க்கு மேல் கிடைக்கும் லாபத்திற்கு 10% டிடிஎஸ் கழிக்கப்படும்.
அக்டோபர் 1 முதல் பொது வருங்கால வைப்பு நிதியில் அதாவது பிபிஎஃப் தொடர்பான மாற்றங்கள் வரவுள்ளன. முதலாவது, மைனர் பெயரில் தொடங்கப்படும் பிபிஎஃப் கணக்குகளுக்கு, அவருக்கு 18 வயது நிறைவடையும் வரை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு விகிதத்தில் வட்டி வழங்கப்படும். அதன் பிறகு, PPF க்கு பொருந்தும் வட்டி விகிதம் பொருந்தும். இரண்டாவது மாற்றம், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளைத் திறந்திருந்தால், தற்போதுள்ள வட்டி விகிதம் முதன்மைக் கணக்கிற்குப் பொருந்தும் மற்றும் இரண்டாம் நிலை கணக்கு முதன்மைக் கணக்கில் இணைக்கப்படும். மூன்றாவது மாற்றம் என்ஆர்ஐகள் பற்றியது. கணக்கு வைத்திருப்பவரின் குடியிருப்பு நிலையைப் பற்றி படிவம் எச் குறிப்பாகக் கேட்கப்படாத, 1968 இன் கீழ் பிபிஎஃப் கணக்குகள் தொடங்கப்பட்ட செயலில் உள்ள என்ஆர்ஐ கணக்குகளுக்கு செப்டம்பர் 30 வரை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு (POSA) வட்டி கிடைக்கும். இந்த தேதிக்குப் பிறகு, வட்டி 0% ஆக இருக்கும்.
அக்டோபர் 1 முதல் எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டின் லாயல்டி திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய விதியின்படி, HDFC வங்கி SmartBuy பிளாட்ஃபார்மில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்ட் பாயிண்டுகளை ரெடீம் செய்வதை, ஒரு காலண்டர் காலாண்டில் ஒரு பிராடெக்ட் என்ற அளவில் மட்டுப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்ப்டுகின்றது. டிஏ உயர்வுக்கு (DA Hike) பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதுயதாரர்களின் அலவிலை நிவாரணம் 53%-54% ஆக அதிகரிக்கும்.
அக்டோபர் 1, 2024 முதல், தேசிய சிறுசேமிப்பு (என்எஸ்எஸ்) திட்டங்களின் (Post Office Small Saving Schemes) கீழ் உள்ள தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு காலாண்டிலும் இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கமான அக்டோபர் 1 ஆம் தேதி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிடிஎஸ் விகிதங்களுக்கு நிதி மசோதாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி sections 19DA, 194H, 194-IB, and 194M பிரிவுகளில் டிடிஎஸ் விகிதம் 5% இல் இருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஈ-காமர்ஸ் தளத்தினருக்கான டிடிஎஸ் விகிதமும் 10%இல் இருந்து 0.1%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமும் வரும் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரி வழக்குகளில் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகளை தீர்க்க Direct Tax Vivad Se Vishwas Scheme, 2024 ( DTVSV, 2024) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் டிசம்பர் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யும் வரி செலுத்துபவர்களுக்கு குறைவான தீர்வு தொகையை வழங்குகிறது.