Homeதமிழ்நாடுஇந்த மாதம் 15 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

இந்த மாதம் 15 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை இருக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி, தசரா, துர்கா பூஜை, வால்மீகி ஜெயந்தி மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் வரவுள்ளன. இதன் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது.

விடுமுறை தினங்கள் விவரம்

அக்டோபர் 1 (செவ்வாய்): மாநில சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் 2024 காரணமாக ஜம்முவில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 2 (புதன்கிழமை): மகாத்மா காந்தி ஜெயந்தி, மஹாலய அமாவாசை காரணமாக இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 3 (வியாழன்): நவராத்ரா ஸ்தாப்னா காரணமாக ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 6: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 10 (வியாழன்): துர்கா பூஜை, தசரா போன்ற சிறப்பு தினத்தின் காரணமாக திரிபுரா, அசாம், நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 11 (வெள்ளிக்கிழமை): தசரா, ஆயுத பூஜை,துர்கா பூஜை காரணமாக தமிழ்நாடு, திரிபுரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 12 இரண்டாவது சனிக்கிழமை: தசரா (மகாநவமி/விஜயதஷ்மி),துர்கா பூஜை காரணமாக தமிழ்நாடு, உத்தரகாண்ட்,டெல்லி, கோவா, பீகார், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 13: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 14 (திங்கட்கிழமை): துர்கா பூஜையின் காரணமாக சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 16 (புதன்கிழமை): லட்சுமி பூஜை காரணமாக திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 17 (வியாழன்): மகரிஷி வால்மீகி ஜெயந்தி பண்டிகைக்காக கர்நாடகா, அசாம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 20: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 26 (நான்காவது சனிக்கிழமை): ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 27: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 31 (வியாழன்): தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும் தடையின்றி நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையில் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள் உட்பட அனைத்து ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் சேவைகளும் முழுமையாக செயல்படும். இதனால் விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை இடையூறு இல்லாமல் தொடர முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சற்று முன்