Homeதமிழ்நாடுகிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை.

கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை.

பொதுவாகவே, சுபமுகூர்த்தம், திருவிழா போன்ற விஷேச நாட்களில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரிக்கும். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்கள் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வந்த மல்லிகைப் பூக்களை ஏலம் எடுக்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக மல்லிகை கிலோ ரூ.500க்கு விற்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி எதிரொலியாக இன்று (செப்.6) கிலோ ரூ.940 ஆகவும், முல்லை கிலோ 235-ல் இருந்து ரூ.700 ஆகவும், அரளி கிலோ ரூ.70-ல் இருந்து 160 ஆகவும், செண்டுமல்லி ரூ.14-ல் இருந்து ரூ.70 ஆகவும் அதிகரித்துள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வழக்கம்போல பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கனகாம்பரம் கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கும் முல்லை பூ 500 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கும், ரோஜா பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றை விட இன்று பூக்களின் குறைவாகத்தான் உள்ளது. விநாயக சதுர்த்திக்கு முதல் நாள் ஆயிரக்கணக்கானர் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். ஆனால் இன்று விற்பனை மந்தமாகவே உள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் வருகை குறைவாகவே இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

சற்று முன்