Homeதமிழ்நாடுபிரதமரின் திட்டத்தால் பயனடைந்த விவசாயி, பிரதமருக்கு கோவில் கட்டி கும்பிட்ட காட்சி.

பிரதமரின் திட்டத்தால் பயனடைந்த விவசாயி, பிரதமருக்கு கோவில் கட்டி கும்பிட்ட காட்சி.

பிரதமர் மோடி மீது அளவு கடந்த பற்றுள்ளவர் சங்கர். பல ஆண்டுகளுக்கு முன்பாக துபாயில் வேலை பார்த்து வந்த அவர், தனது சொந்த ஊருக்கு திரும்பி விவசாயத்தில் ஈடுபட்டு தற்போது முழு நேர விவசாயியாக உள்ளார்.

இந்நிலையில் தனது நிலத்தில் மோடிக்கு கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார். இந்த கோவிலை கடந்த 2019ஆம் ஆண்டு 1.25 லட்சம் ரூபாய் செலவில் அவர் கட்டியுள்ளார்.

இது குறித்து விவசாயி சங்கர் கூறியதாவது, “பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த நான், அவர் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக என்னுடைய சொந்த நிலத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முதலாக அவரது உருவச்சிலை அமைத்து கோயில் கட்டினேன்.சுமார் 1.25 லட்சம் ரூபாய் சொந்த செலவில் ஆறு மாதங்களில் கோயில் கட்டினேன். இவரது ஆட்சிக் காலத்தில் அளித்த திட்டங்களால் நல்ல மகசூல் கிடைத்தது. அதனால், அவரை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன். ஒவ்வொரு சாகுபடியிலும் கிடைக்கும் லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, ஐந்து ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன்.

அவர் மூன்றாவது முறை பிரதமாக வேண்டும் என்று பழனி மலை முருகனிடம் வேண்டுதல் வைத்திருந்தேன். அந்த வேண்டுதல் தற்போது நிறைவேறி உள்ளதால், வரும் தை மாதம் முடிந்த பிறகு தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனைச் செலுத்த உள்ளேன். மேலும், 1000 பேருக்கு கிடா வெட்டி விருந்து வைக்கப்போவதாக கூறியுள்ளார்.

என்னுடைய காலத்திற்குப் பிறகும் இந்த கோயில் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.எனது தொட்டத்தில் விளையும் பொருட்களை எல்லாம் கோயிலுக்கு கொண்டு வந்து படையலிட்ட பிறகு தான் வியாபாரத்திற்கு கொண்டு செல்வேன். பிரதமர் மோடி நீண்ட நாட்களுக்கு நலமுடன் வாழ வேண்டும். அடுத்த முறையும் அவரே பிரதமராக வர வேண்டும். மேலும், விவசாயிகளுக்கான இன்னும் பல நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

சற்று முன்