Homeதமிழ்நாடுரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு சீக்கிரம் புது ரேஷன் கார்டு வந்துடும். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு சீக்கிரம் புது ரேஷன் கார்டு வந்துடும். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகள் வேண்டி ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதற்கு முக்கிய காரணமாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையாகும்.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டு குடும்பமாக இருப்போரில் பலரும் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்தனர். இதனால் வழக்கத்து மாறாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு தேர்தல் நடத்தை விதிகளால் ரேஷன் கார்டு வழங்கும் பணி தள்ளிப்போனது.

கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி நடத்தை விதிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு விரைவுப்படுத்தியது. அதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன.

இதன்மூலம் அடுத்த 15 முதல் 30 நாட்களில் தமிழகத்தில் புதிதாகவிண்ணப்பம் செய்த 2.8 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று மாநில உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.அடுத்த 15 அல்லது 30 நாட்களுக்குள் மாவட்ட வாரியாக ரேஷன் கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்’’ என்றார். இதன்மூலம் அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் புதிதாக 2.8 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு கிடைப்பது உறுதியாகி உள்ளது.

சற்று முன்