Homeதமிழ்நாடுரேஷன் கார்டு ஆதார் கார்டு இணைக்க காலக்கெடு நீடிப்பு!

ரேஷன் கார்டு ஆதார் கார்டு இணைக்க காலக்கெடு நீடிப்பு!

ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்து பல்வேறு இடங்களில் இருந்து இலவச ரேஷன் கார்டுகளை பயன்படுத்தும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க அரசு வலியுறுத்தியுள்ளது.மேலும், ஒருவர் இறந்த பிறகும், அவர்களின் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வேறு யாரோ பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இதனைத் தடுக்க, ஆதார் உடன் ரேஷன் அட்டையை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அது குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.அரசு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தில் பலன்களைப் பெற, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்க ஜூன் 30 கடைசி தேதியாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) தெரிவித்துள்ள தகவலின் படி, பொதுமக்களின் ரேஷன் கார்டு உடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்காக வழங்கப்பட ஜூன் 30, 2024 ஆம் தேதி இப்போது நீடிக்கப்பட்டுள்ளது. புதிய இறுதிக்கட்ட காலக்கெடு நாளாக வரும் செப்டம்பர் 30, 2024 (September 30, 2024) ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் ஆதார் விபரங்களை நீங்கள் இன்னும் இணைக்கவில்லை என்றால், உடனே இணைத்துவிடுங்கள்.

இதை செய்ய தவறும் பச்சத்தில், ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்