Homeதமிழ்நாடுவீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டில் புதுசாக பெயர் சேர்க்க வேண்டுமா? இதை தெரிஞ்சுக்கோங்க.

வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டில் புதுசாக பெயர் சேர்க்க வேண்டுமா? இதை தெரிஞ்சுக்கோங்க.

ரேஷன் கார்டில் புதிதாக ஒரு பெயரை ஆன்லைனிலே எப்படி சுலபமாக இணைப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அன்றாட உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்புவை மாதம் மாதம் குறைந்த விலையில் ரேஷன் கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம். மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பொதுவாக யாரேனும் இறந்து விட்டாலோ அல்லது திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்று விட்டாலோ அவரின் பெயர் நீக்கம் செய்யப்படும். அதே போல் புதிய பெயர் இணைப்பதும் நடக்கும்.

முன்னதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் அல்லது சேர்க்கை போன்றவற்றை செய்ய தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் ரேஷன் கார்டில் வீட்டில் இருந்தபடியே புதிய பெயரை எப்படி சேர்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

1. அதன்படி https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

2. அதனை தொடர்ந்து “பயனாளர் நுழைவு” என்பதைப் பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும்.

3. இதனையடுத்து ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவிட்டு கேப்ட்ச்சா குறியீட்டையும் பூர்த்தி செய்து “பதிவு செய்” என்பதை தேர்ந்தெடுக்கவும்

4. அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP ஒன்று வரும்.

5. அதனை பதிவு செய்து உள்நுழையவும். தற்போது ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள், குடும்ப அட்டை நம்பர், குடும்பத்தில் உள்ள பெரியவர், சிறியவர்களின் எண்ணிக்கை என அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

6. இதனையடுத்து “மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்” என்பதன் கீழ் இருக்கும் “உறுப்பினரை சேர்க்க” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

7. அதனை தொடர்ந்து யாருடைய பெயரை சேர்க்க வேண்டும் அதனை இணைக்க வேண்டும்.

8. இதன் மூலமாக வெற்றிகரமான ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கும் நடைமுறை நிறைவு செய்யப்படும்.

இதனையடுத்து 1 முதல் 3 நாட்களில் ரேஷன் கார்டில் பெயர் அப்டேட் ஆகிவிடும். இதனை ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

சற்று முன்