ரேஷன் கார்டுடனும், ஆதார் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டது. இதற்காக ஜுலை 30 ஆம் தேதி காலக்கெடு அளிக்கப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தேதிக்குள் இணைக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது என்றும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது தொடர்பாக பொது விநியோக அமைப்பு அளித்துள்ள விளக்கத்தில், “ இந்திய அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதி ஆதார், ரேஷன் கார்டு இணைக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக வெளியிட்டிருக்கும் கெடு தான்.ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஏற்கனவே ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஆதாருடன் இணைக்கபட்டுவிட்டன. அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் இன்னும் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மொத்த கார்டுகளும் இணைக்கப்பட்டு விட்டன. அத்துடன், தற்போது புதிதாக ரேஷன் கார்டு வழங்கும் போதும், புதிதாக பெயர்கள் சேர்க்கப்படும் போதும் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டுகின்றன. இந்த வசதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.