Homeதமிழ்நாடுஅடையாள அட்டை இருந்தால்தான் இனி சானிடைசர் வாங்க முடியும்

அடையாள அட்டை இருந்தால்தான் இனி சானிடைசர் வாங்க முடியும்

விஷ சாராய மரணம் எதிரொலியாக மருந்து கடைகளில் சானிடைசர் வாங்க செல்வோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்-மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அளவுககு அதிகமாக சானிடைசர் வாங்குவோரிடம் அடையாள அட்டையை பெற்று கொள்ள வேண்டும் என்றும், விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

சற்று முன்