Homeதமிழ்நாடுசவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய என்ன காரணம்? உச்ச நீதிமன்றம் கேள்வி.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய என்ன காரணம்? உச்ச நீதிமன்றம் கேள்வி.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பெண் காவலர்களை அவதூறாக பேசி நேர்காணல் கொடுத்த வழக்கில் எதிராக பெண் காவல் அதிகாரிகள் திருச்சி உள்பட பல இடங்களில் புகார் அளித்தனர். அடுத்தடுத்து வழக்குகள் பதிவான நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமினில் விடுவிக்ககூடாது? – உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும் – தமிழ்நாடு அரசு தரப்பு

சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

சற்று முன்