Homeதமிழ்நாடுமூத்த குடி மக்களுக்காக போஸ்ட் ஆபீஸில் புதிய திட்டம்! மாதம் தோறும் 20,500 வரை வருமானம்...

மூத்த குடி மக்களுக்காக போஸ்ட் ஆபீஸில் புதிய திட்டம்! மாதம் தோறும் 20,500 வரை வருமானம் பெறலாம்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. அவர்கள் வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக அஞ்சல் துறை இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல் வி.ஆர்.எஸ் எடுத்தவர்களும் கூட இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு அரசு 8.2% வட்டியை செலுத்துகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.15 லட்சம் சேர்த்து முதலீடு செய்யும் போது, ஒவ்வொரு மாதமும் ரூ.10,250 வரும்.

அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யும் போது, ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். இதன் மூலமாக மாதந்தோறும் ரூ.20,500 மற்றும் காலாண்டிற்கு ரூ.61,500 பெறலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை துவங்கலாம். அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் முதலீடு தொகை.

இதன் மூலமாக முதலீடு செய்யும் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டி ஆகியவை பெறலாம். மேலும், பிரிவு 80C ன் படி இந்த முதலீட்டுக்கு வரி விலக்கும் உண்டு. இந்திய அரசால் இத்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் முதலீடு பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இத்திட்டத்தில் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீட்டாளர் வரிவிலக்கும் பெறலாம். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி கிடைக்கும். ஏப்ரல், ஜுலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஒவ்வொரு வருடமும் முதல் தேதியில் வங்கி கணக்கில் வட்டி சேர்க்கப்படும்.

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்திற்கான (அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 2024) கணக்கை உங்களின் மனைவி அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாக துவங்கலாம். இதன் வாயிலாக அதிக பலனை பெறலாம்.

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டம் ஆகும். இதில் மொத்த தொகை வருவாய் வைக்கப்படும் போது மாதந்தோறும் வருமானம் கிடைக்கும். தனிநபர் ஒரே கணக்கில் ரூ. 9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ. 15 லட்சம் வரையிலும் இந்த திட்டத்தின் வாயிலாக டெபாசிட் செய்யலாம்.

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் தற்போது 7.4 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மனைவியுடன் சேர்ந்து ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யும் போது, ஒவ்வொரு மாதமும் 7.4 சதவீத வட்டியில் ஒவ்வொரு மாதமும் ரூ. 9,250 வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்