சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் அவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவர், ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனு மீது நாளை (ஆக.13) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.