Homeதமிழ்நாடுவிரைவில் தமிழக ஆளுநர் மாற்றப்படுவாரா?

விரைவில் தமிழக ஆளுநர் மாற்றப்படுவாரா?

தமிழக கவர்னர் மட்டுமின்றி கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதே போல் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளையும் வகித்து வருவதால் அந்த இரண்டு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது தவிர மேலும் சில மாநில கவர்னர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் தமிழகம், கேரளா,தெலுங்கானா உட்பட சில மாநிலங்களில் கவர்னர்களை நியமனம் செய்வது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு ஆர்என் ரவி கவர்னராக நீடிப்பாரா அல்லது புதிய கவர்னர் நியமனம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

IPS அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப்பெற்ற ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்.என். ரவி, நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது, 2021 செப்டம்பரில் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தமிழக அரசோடு சுமூகமான உறவை கொண்டிருந்த ஆளுநர் ரவி, நீட் மசோதாவை கிடப்பில் போட இருதரப்பு மோதல் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 2023 ஜனவரியில் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே சிறப்பாக இருக்கும் என அவர் சொன்னது, சட்டப்பேரவையில் அரசு உரையை மாற்றி படித்தது, முதல்வரை விட தனக்கே அதிகாரம் என அமைச்சரை நீக்கியது எல்லாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அவரது பதவிக்காலம் இம்மாதத்தோடு நிறைவடைகிறது. இப்போது அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? அல்லது மத்தியில் பெரிய பொறுப்பை கொடுக்கலாமா? பாஜகவை சேர்ந்த மற்றொரு நபரை ஆளுநராக கொண்டு வரலாமா என்பது குறித்து மத்திய அரசு தரப்பு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

சற்று முன்