தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இம்மானுவேல் சேகரனார் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் செப்டம்பர். 11ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.