Homeதமிழ்நாடுசெல்வப் பெருந்தகை, த வெ க தலைவர் விஜய்க்கு செய்த அட்வைஸ்.

செல்வப் பெருந்தகை, த வெ க தலைவர் விஜய்க்கு செய்த அட்வைஸ்.

தவெக தலைவர் தனது விக்கிரவாண்டி கூட்டத்தின்போது பேசிய வார்த்தைகள் அனைத்து இன்றளவும் தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக பிரமுகர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பேசியது தற்போது அனலை கக்க தொடங்கிவிட்டது.

அவர்களது பேச்சு திமுக கூட்டணி கட்சிகளில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அமைச்சர்களும் திமுக தலைவர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனா். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு மேடையில் பேசுவது மட்டும் கைகொடுக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நடைபெறுவது முடியாட்சி அல்ல, குடியாட்சி ஆகும்.

1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மேடையில் பேசி முடிவு எடுக்கும் விஷயம் இது கிடையாது. விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். மேடையில் அவர் பேசுவது மட்டுமே கைக்கொடுக்காது ” என கூறி உள்ளார்.

சற்று முன்