Homeதமிழ்நாடுதமிழகத்தில் புதுசாக உருவாகிறது 2 மினி டைட்டில் பார்க்

தமிழகத்தில் புதுசாக உருவாகிறது 2 மினி டைட்டில் பார்க்

தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் தற்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை அமல்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மட்டுமே அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக கோவை, மதுரை மற்றும் திருச்சியில் மட்டுமே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக நெல்லை தென்காசியில் ஜோஹோவின் ஒரு அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை தேடி ஐடி நிறுவனங்களின் மையமாக விளங்கும் பெங்களூரு, புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் இதனை மாற்றும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள மதுரை மாட்டுத்தாவணியில் மிகப்பெரிய அளவில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், தற்போது அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் கட்ட மற்றும் வளர்ந்து வரும் முக்கிய நகரங்களாக இருக்கும் கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகளையும் துவங்கியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளது இளைஞர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்