Homeதமிழ்நாடுஇந்த வருட பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட நிதி இல்லையாம்

இந்த வருட பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட நிதி இல்லையாம்

தமிழ்நாட்டு வளர்ச்சி திட்டங்கள் அணைத்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 86 நிமிடங்களுக்கு வாசித்தார். இதில், பீகார், ஆந்திராவுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்ற பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், அதுபற்றிய எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. அத்துடன், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை.

சற்று முன்