Homeதமிழ்நாடுதங்கம் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி.

தங்கம் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி.

மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.இதன் காரணமாக தங்கம் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 22 கேரட் கொண்ட 8 கிராம் தங்கம் 54,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.6,825க்கு விற்பனையானது.

இந்நிலையில் பட்ஜெட் எதிரொலியாக கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.6,550 விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து 52,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.92.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிலோவுக்கு 3,500 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.92,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சற்று முன்