Homeதமிழ்நாடுதனித் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் +2 மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

தனித் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் +2 மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் (Original Mark Certificates) / மதிப்பெண் (Statement Of Mark) பெற்றுக் கொள்ளலாம். மேலும். விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளியிலும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையத்திலும்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண்‌ பட்‌டியலினைப் பெற்றுக் கொள்ளலாம்‌.

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌தேர்வுகளில்‌ அனைத்துப்‌ பாடங்களிலும்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்‌, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (600 மதிப்பெண்கள்‌) மற்றும்‌ மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்‌) மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்‌.

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விலோ / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விலோ அல்லது இரண்டு பொதுத்‌ தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள்‌ இரு தேர்வுகளிலும்‌ பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண்‌ பட்டியலாக (Statement Of Mark) வழங்கப்படும்‌. இம்மாணவர்கள்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும் இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளில்‌ அனைத்து பாடங்களிலும்‌ தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண்‌ இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்படும்‌.

சற்று முன்