Homeதமிழ்நாடுதனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 4,043 தனியார் பள்ளிகள் மற்றும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். இது தவிர அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு உதவிய தனியார் பள்ளிகளின் தாளாளர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து பள்ளி மாணவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

அதன்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்பதே தமிழக அரசின் லட்சியம். இதற்காகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்து, பார்த்து செய்து வருகிறார்.

தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. இதற்கு அரசின் நடவடிக்கைகளுக்கு தனியார் பள்ளிகள் வழங்கும் ஒத்துழைப்பும் காரணமாகும். மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு அனைத்து விதத்திலும் உதவ தயாராகவே உள்ளது.

மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இனிவரும் கல்வியாண்டுகளில் இந்த குழந்தைகளுக்கான கல்விக் கட்டண தொகை அந்தந்த ஆண்டிலேயே விடுவிக்கப்படும். எனவே, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி மட்டுமின்றி தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சற்று முன்