சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாத் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என அவருடைய மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் விஜயகாந்துக்கு வழங்கியதை போல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடம் வழங்க வேண்டும் என்றார்.
அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் , பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் குறுகிய பகுதி, குடியிருப்புகள் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் ஆம்ஸ்ட்ராங் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது.அந்த இடத்தில் வீரவணக்கம் செலுத்த அவருடைய ஆதரவாளர்கள் புறப்பட்டால் அந்த குறுகிய இடத்தில் நெரிசல் ஏற்படும் என தனது வாதத்தில் தெரிவித்தது.
ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். அவரது உடலை நல்லடக்கம் செய்ய 200 சதுர அடி இடத்தை தர அரசு தயார். அதுவும் பெரம்பூரிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் கொடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அப்போது மனுதாரரோ, பெரம்பூரிலேயே 7500 சதுர அடியில் இடம் கொடுங்கள் என கேட்டார்.
இந்நிலையில் சற்றுமுன் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது,திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்பது தான் பிரச்சனை என்றும் கட்சி அலுவலகத்தில் மணி மண்டபம் கட்டுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் கட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் அனுமதியுடன் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்யலாம்.பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலலகத்தில் மணி மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை அரசு அனுமதியுடன் பெரம்பூர் கட்சி அலுவலுகத்தில் மணிமண்டபம் கட்டி கொள்ளலாம் எனவும் நீதிபதி பவானி சுப்பாராயன் தெரிவித்துள்ளார்