Homeதமிழ்நாடுதன்னுடைய கடையில் திருட, தானே ஆளை செய்து கொண்ட முதலாளி.

தன்னுடைய கடையில் திருட, தானே ஆளை செய்து கொண்ட முதலாளி.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் உள்ள நகைக்கடையில் கொள்ளைப் போனதாக நாடகம் நடத்திய நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ம் தேதி மாலை மர்ம நபர்கள் இருவர் நகைக் கடைக்குள் நுழைந்து கத்தியால் குத்தி, தாக்கிவிட்டு 50 சவரன் கொள்ளையடித்துச் சென்றதாகக் கடை உரிமையாளர் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீஸ் டீம், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியது. விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம், பிவார் ஜில்லா பிப்லாஜைச் சேர்ந்த ஹர்சத்குமார் பட் (39), சுரேந்தர் சிங் ஆகிய இருவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் டீம், ராஜஸ்தானுக்குச் சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹர்சத்குமார் பட், சுரேந்தர் சிங் ஆகிய இருவரையும் பிடித்தது. பின்னர் இருவரையும் சென்னைக்கு அழைத்துவந்த போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமார் அளித்த ஐடியாவில், கடையில் இருந்த போலியான நகைகளைக் கொள்ளை அடித்ததாகவும், அதை ரயில் நிலையம் அருகில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைதானவர்கள் அளித்த தகவலின்படி நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமாரிடம் விசாரித்தோம். அப்போது அவர், தனக்கு லட்சக்கணக்கில் கடன் இருப்பதாகவும்… அதை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தாகவும் கூறினார். அதனால்தான் தனக்குத் தெரிந்த ஹர்சத்குமார் பட், சுரேந்தர் சிங் மூலம் இந்த கொள்ளை சம்பவத்துக்கு பிளான் போட்டதாகவும் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

கடை உரிமையாளர் ரமேஷ்குமார் கடனில் சிக்கியுள்ள நிலையில் கொள்ளை நாடகம் அரங்கேற்றப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சற்று முன்