- Advertisement -
தமிழ்நாடு

தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தொட்டபெட்டாவும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தொட்டபெட்டா நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இதன் உயரம் 2623 மீட்டர் ஆகும். மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும். இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிமாநிலங்கள், மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர்.

இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை (ஜூன் 19) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டண மையம் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts