தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் வடிவேலு. இவர் 10 ஆண்டுகளாக சரிவர படங்களில் நடிக்கவில்லை. காவலன், மெர்சல், கத்திசண்டை உள்பட வெகுசில படங்களிலேயே நடித்தார்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் வடிவேலு நடிக்கவில்லை. அதற்கு காரணம் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாக விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் கொடுத்த புகார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் , வடிவேலு இனி சினிமா படங்களில் நடிக்கவே முடியாது என்பதை குறிக்கும் ‘ரெட் கார்ட்’ கொடுக்கப்பட்டு இருந்தது.இதனிடையே சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்ககப்பட்டுள்ளது. வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யப்பட்டதால் தமிழ் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை. வலுவேலு மீதான ‘ரெட் கார்ட்’ நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் வடிவேலு சந்தித்தார்.உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பூங்கொத்து கொடுத்து வடிவேலு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலுவும், உதயநிதியும் மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.