Homeதமிழ்நாடுஎக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் இனி நிம்மதியாக பயணிக்கலாம்! ரயில்வே துறை அறிவித்த புதிய...

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் இனி நிம்மதியாக பயணிக்கலாம்! ரயில்வே துறை அறிவித்த புதிய விதி.

சமீப காலமாக முன்பதிவு ரயில்களில் ஓபன் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டுமின்றி, ஏசி இரண்டாம் வகுப்பு, 3ம் வகுப்பு பெட்டிகளை ஆக்கிரமிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.

பொதுவாக இது வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் தான் அதிகம் நடப்பதை பார்க்க முடியும். ஆனால் சமீப நாட்களாக தமிழகத்திற்குள் ஓடும் ரயில்களிலும் முன்பதிவு பெட்டிக்குள் அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்த பயணிகள் அத்துமீறி ஏறும் காட்சிகளை காண முடிகிறது.வைகை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் கூட முன்பதிவு பெட்டிக்குள் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஏறிச்சென்றதை பார்க்க முடிந்தது.ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் பயணம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,சென்னையில் சிறப்பு டீமை ரயில்வே இறக்கியது. இந்த ஸ்பெஷல் டீம் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி ஏறிய பயணிகளை இறக்கி விட்டது. ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய ஸ்பெஷல் டீம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த அதிரடி சோதனயை இன்று மேற்கொண்டது.ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவுக்கான டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சற்று முன்