தமிழகத்தைப் பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி இருக்கின்றனர். ஆனால் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. படித்த படிப்புக்கான வேலை கிடைத்தால் தான் செல்வோம் என இளைஞர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தமிழகத்தில் குவிந்து வருகின்றனர்.ஹோட்டல் பணி துவங்கி கட்டுமான பணி வரை வடமாநில இளைஞர்கள் நிறைய வேலை வாய்ப்புகளை ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் தனது கடைக்கு ஆட்கள் தேவை என பேனர் ஒன்றை வைத்துள்ளார். அதில்,” கரும்பு ஜூஸ் பிழிய இளைஞர்கள் தேவை.. மாதம் 18,000 ஊதியம் வழங்கப்படும்.. பிஇ, பிஎஸ்சி, பிஏ படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்” என அவரது தொலைபேசி எண்ணோடு பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இளைஞர்களிடையே எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்திருப்பதாக கூடுகிறார் கடையின் உரிமையாளர்.