கோவை மக்களின் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் பாஜக எம்.எல் ஏ வானதி சீனிவாசன்.
தனது தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், தொகுதியின் வளர்ச்சித் திட்ட கோரிக்கைகளை வைப்பதற்காகவும் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது.