Homeதமிழ்நாடுவிஜய் கட்சியின் புதிய டிவி சேனல் பெயர் என்ன தெரியுமா?

விஜய் கட்சியின் புதிய டிவி சேனல் பெயர் என்ன தெரியுமா?

தவெக மற்றும் விஜய் குறித்த கருத்துகள் ஒரு வாரத்துக்கு மேலாகியும் அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, விஜயின் தவெக கட்சி சார்பில் புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த சேனலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி சார்ந்த செய்திகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளாராம்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல, தவெக தலைவர் விஜயும் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி சேனல் தொடங்குவது குறித்து தனது கட்சியினரிடையே ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அந்த தொலைக்காட்சி சேனலுக்கு தமிழ் ஒளி என்று பெயரிடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஒளி என்ற பெயரிலேயே தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுமா அல்லது வேறு பெயரில் தொடங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்