Homeதமிழ்நாடுராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதற்கு, த. வெ. க தலைவர் விஜய் வாழ்த்து.

ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதற்கு, த. வெ. க தலைவர் விஜய் வாழ்த்து.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்னர் சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த பதவியை வகித்திருந்தனர்

இந்திய அணியில் காங்கிரஸ் மிகப்பெரிய உறுப்பினராக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் அவர்கள் 99 இடங்களை வென்றனர், அதில் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகித்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே கூறினார்.

சற்று முன்