Homeதமிழ்நாடுதிருமண கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடந்த சுவாரஸ்யம்.

திருமண கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடந்த சுவாரஸ்யம்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த தேவகி என்ற பெண்னுக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அன்பரசன் எம்பவருடன் இன்று காலைப் புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மணப்பெண் தேவகி கணவருடன், மணக்கோலத்தில் சென்று வாக்களித்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி. அன்புமணி ஆகியோர் வாக்கினை பதிவு செய்தார்.

மதியம் 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குப்பதிவாகியுள்ளது.

சற்று முன்