- Advertisement -
தமிழ்நாடு

இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் தனது பதிலுரையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பெரு நிறுவனங்களை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சட்டமன்றத்தில் கூறினார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 மார்ச் மாதம் துபாய் எக்ஸ்போ நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் துபாய் சென்றிருந்தார். அங்கே உள்ள 6 முக்கிய தொழில் நிறுவனங்களுடன் சுமார் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெப்பம் இட்டார். இதன் மூலம் மட்டும் 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அடுத்ததாகக் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் சென்னையில் நடத்தியது. இது மிகப்பெரிய முன்னெடுப்பாகப் பல வர்த்தக நிறுவனங்களால் கூறப்பட்டது. அதற்காக உலக முழுக்க இருந்து பல தொழிலதிபர்கள் சென்னையை முகாமிட்டனர்.

இதன் மூலம் ஸ்டாலின்,, மிகப்பெரிய அளவுக்கு முதலீட்டாளர்களை ஈர்த்தார். இந்த மாநாடு மூலம் கிட்டத்தட்ட 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அதே ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குப் பயணம் செய்தார். சுமார் 12 நாள்கள் வெளிநாட்டிலிருந்தார். இந்தப் பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.3440 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னை திரும்பிய ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் தான் இப்போது புதியதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது

- Advertisement -
Published by

Recent Posts