Homeதமிழ்நாடுwhatsapp மூலம் மின்சார கட்டணம் செலுத்த முடியுமா என்ன?

whatsapp மூலம் மின்சார கட்டணம் செலுத்த முடியுமா என்ன?

தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கியுள்ளது. மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் அப்போதெல்லாம் மின்சார வாரிய அலுவலகத்தில் வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருந்தது.

மேலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.

இதனால் மீட்டரை பார்த்து கார்டில் என்ட்ரி போட வேண்டிய வேலையே இல்லை. நாம் பயன்படுத்திய யூனிட்கள் ஆன்லைனில் ஏறிவிடும். அதை வைத்து நாம் பணம் செலுத்தி வருகிறோம். டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் Tangedco இலச்சினை மற்றும் பச்சை குறியீடு இருக்கும். மேலும் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் வரும். அதில் View Bill, Pay bill என வரும். முதலில் வியூ பில்லை கிளிக் செய்தால் உங்கள் மின் கட்டணம் பிடிஎஃப்பில் டவுன்லோடு செய்யலாம்.

அந்த கட்டணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு pay bill என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் போன் பே, கூகுள் பே என எது வேண்டுமோ அதை ஓபன் செய்து பணத்தை செலுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) உங்கள் மின்சாரக் கட்டணம் தயாராக இருக்கும்போது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பும். பில்லை பார்க்கலாம், செலுத்தலாம் என தமிழ்நாடு வாரியம் தெரிவித்துள்ளது.

சற்று முன்